Monday, 30 September 2013

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

Posted on April 23, 2013 by ARIHARAN
கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள் ளேயோ அல்லது மதர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலே யோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.
(Cache எனும் இந்த ஆங்கில வார்த் தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படு கிறது என்பதைக் கவனத்திற் கொள் ளுங்கள்)
ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சி பி யூ இந்த கேஷ் மெமரியைப் பயன்படுத்துகிறது. இதனால் கணினி யின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.
கணினியில் கேஷ் மெமரி பயன்படுத்தப்படுவதன் முக்கிய அனுகூ லம் யாதெனில் டேட்டாவைக் கடத்து வதற்கென அமைக்கப்பட்டி ருக்கும் மதர் போர்டிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதை களை சீபீயூ பயன்படுத்தவேண்டிய தேவை அற்றுப் போகி றது.
சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற் திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ் ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீ.பீ.யூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட் டாவைப் ப்ரோ ஸெஸ் செய்து விடுகிறது.
கேஷ் மெமரியில் இரண்டு வகை களுள்ளன. சிபியுனுள்ளேயே இணைந்து வரும் கேஷ் மெமரி யானது Level 1 (L1) cache எனவும் மதர்பொர்டில் வேறாக பொரு த்தப்பட்டுள்ள கேஷ் மெமரியானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.
சீபியுவினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரியானது மதர் போர்டில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரி சிப்பைவிட வேகமாக செயற்படக் கூடியது. அதாவது ப்ரோஸெஸ்ஸ ரின் வேகத்திலேயே இது இயங்கும்.
தனியாகப் பொருத்தப்படும் கேஷ் மெமரியானது பிரதான நினைவகமா ன ரேம்மைவிட இரண்டு மடங்கு வேகத் தில் இயங்கக் கூடியது. எனவே ப்ரோ ஸெஸ்ஸரிலேயே பொருத்தப்படும் கேஷ் மெமரியே சிறந்தது என லாம்.
அதிக வேகம் கொண்ட சீபியூ வுடன் குறைந்தளவு கேஷ் மெமரி யைப் பயன்படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த சீபியு வேகத்துடன் அதிக கேஷ் மெமரியைக் பயன்படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை அவதானிக்க் முடியும்.
சீபியுவில் பயன் படுத்தப்படும் கேஷ் மெமரி போன்றே ஹாட் டிஸ் கிலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட் பம் பயன்படுத்தப்படுகிறது. அதாவாது ஹாட் டிஸ்கிலிருந்து அடிக்கடி அணுகப்படும் டேட்டாவானது திரும்பத் திரும்ப ஹாட் டிஸ்கிலிருந்தே பெறப்படுவதைத் தவி ர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்க ப்படும்.
இங்கு ஹாட்டிஸ்கை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு ரேமில் தேக்கி வைக்கப் படுகி றது, எனினும் இந்த தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஏனெனில் தற்போது ஹாட் டிஸ்க் ஆனது ப்ளேஷ் மெமரி கேஷ் (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி ரேமை விடவும் வேக மாக செயற்படக் கூடியது.

IP Address என்றால் என்ன?

IP Address என்றால் என்ன?

Posted on July 26, 2013 by ARIHARAN
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப் படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கி றது.அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை  மட்டுமே குறித்து நிற்கும். இன் னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது. இதனை ஆங்கிலத்தில் Uniqueness எனப்படுகிறது.இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முக வரியை இணைய சேவை வழங்கும் நிறு வனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிக மான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,இதனை டை னமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தி ல் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான(Static) ஐபி முகவரியைக் கொண்டி ருக்கும்.ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத் தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக் கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதி களும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொ ரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களைபைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவ ரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.
பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இல க்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்ப தால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.
இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைக ளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொ ரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ் வேறான சேர்மானங்களை உருவாக்க லாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்க ளைக் கொண்டிருக்க முடியும்.
இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவா க்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்.

உங்களுடைய கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?

உங்களுடைய கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?

Posted on July 18, 2013 by ARIHARAN
உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களைமேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரி ல் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். விண்டோஸ் ஆப்பரேட்டி ங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொ ண்டுள்ள வர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ் டம் பைல்களி ல் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமை ப்பை பாதிக்கலாம். இந்த இருவகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரை ப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள் ளது. இதனால் தான், மற்றவர்கள், உங் கள் கம்ப்யூட்டரில் எந்தவித மாற்றத் தினையும் ஏற்படுத்த முடியாது. முக்கி யமான பைல்களை அழிக்க முடியாது. இஷ்டத்திற்கு ஆண்ட்டி வைரஸ் புரோ கிராம்களை இன்ஸ்டால் செய்திட முடி யாது.
சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடு த்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல், நீங்கள் இயக்க முயற்சிக் கையில், முதலில் திரை யில் தோன்றும் கட்டத்தி ல், இந்த புரோகிராம் உங் கள் கம்ப்யூட்டரில் மாற்ற ங்கள் ஏற்படுத்துவதனை அனுமதிக்கிறீர்க ளா? என்ற கேள்வி கேட் கப்படும். நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில், அந்தக் கம் ப்யூட்டரில் நுழையவில்லை என்றால், அந்த புரோகிராமினைத் திற க்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் உங்களுக்கு அனுமதி கிடை க்காது. பைல்களை அழிக்க முற்படு கையிலும், புரோகிராம்களைஇன்ஸ்டால் செய்திட முயற்சிக்கை யிலும் இதேபோல அனுமதி மறுக் கப்படும்.
அனுமதி மறுக்கப்படும் இந்த புரோ கிராம்களை இயக்குவதற்கும், புதிய சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதற்கும், உங் களைப் பற்றிய குறிப்பு தொகுதியை (profile), ஓர் அட்மினிஸ்ட்ரே ட்டர் தொகுதியாக மாற்ற வேண்டும். உங்களால், அட்மினிஸ்ட்ரேட்டருக்கான சலுகைகளைப் பெறும் வகையில் நீங்கள் லாக் இன் செய்யவில்லை என்றால், முதலில் ஸ்டார்ட் மெனு திறக்கவும். பின்னர், “Shut Down” என்ற பட்டன் அருகே உள்ள, அம்புக்குறி ஐ கானில் கிளிக் செய்திடவும். பின்னர், “Switch User” என்பதனைத் தேர்ந்தெடுத்து, எந்தவித profileல் நீங்கள் கம்ப்யூட்ட ரைப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனையும் தேர்ந்தெடுக்கவும். கம்ப் யூட்டரில் உள்ள அக்கவுண்ட் ஆப்ஷ ன்ஸ் பிரிவை அணுக, மீண்டும் ஸ்டா ர்ட்மெனு திரும்பி, கண்ட்ரோல் பேன ல் பட்டனை அழுத்தவும்.
கண்ட்ரோல் பேனல் மெனுவில், பச் சை நிறத்தில் உள்ள “User Accounts and Family Safety ,”"தலை ப்பில் கிளிக் செய்திடவும். இது விண்டோவில், மேல் வலது மூலை யில் இருக்கும். இதில் “User Accounts ” என்பதில் கிளிக் செய்து, ஆப்ஷன்ஸ் பெறவும். அடுத்து நீல வண்ணத்தில் தரப்பட்டிருக்கும் “Change Your Account Type,” என்ற லிங்க்கில் கிளி க் செய்திட வும். இது “Make Changes To Your User Account” என்பதன் கீழாகக் கிடைக்கும். இனி உங்கள் profile ஐ அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவு ண்ட்டாக மாற்ற, “Administrator” என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதன் பின் விண் டோவின் கீழாக உள்ள “Change Account Type” என்னும் பட்டனில் கிளிக் செய் திடவும்.
சில வேளைகளில், அட்மினிஸ் ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் நு ழைவ தனாலேயே, ஆப்பரேட் டிங் சிஸ்டத்தின் அனைத்து பைல்களையும் அணுக முடி யாது. சில புரோகிராம்களை இயக்கும் முன், அதனை அட் மினிஸ்ட்ரேட்டராக இயக்க விரும்புவதனைச் சுட்டிக் காட்ட வேண் டும். சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இந்த ஆப்ஷனைக் கேட்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், சில செக்யூரிட்டி புரோகிராம்கள் இந்த சோதனையை நடத்தும்.
தேனும் சில புரோகிராம்கள், அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக லாக் இன் ஆன பின்னரும், அதன் முழு வசதிகளையும் பயன்படுத்த அனுமதி க்கவில்லை என்றால், அதன் டெஸ்க்டாப் ஐகானில், ரைட் கிளிக் செய்து, Run as Administrator என்ற ஆப்ஷனை த் தேர்ந்தெடுத்துப் பின் இயக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேட்டர்
அக்கவுண்ட்டிற்கு சிஸ்டம் பைல்களை மாற்றும் அனுமதி தரப்படுவதால், நம் அன்றாட பணிகளுக்கு, மைக்ரோசாப்ட், ஸ்டாண்டர்ட் அக்க வுண்ட் ஒன்றைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறது. இதனால் சில வச திக் குறைவுகள் ஏற்பட்டாலும், ஸ்பை வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்க ள், உங்கள் கம்ப்யூட்டரில் தங்கள் ஆளுமை யை ஏற்படுத்துவது சிரமமா க மாறும். ஏன், முடியாமலே போகலா ம்.

கணணியில் தோன்றும் சில த‌வறுகளும் , அதற்கான விளக்கங்களும்!

கணணியில் தோன்றும் சில த‌வறுகளும் , அதற்கான விளக்கங்களும்!

Posted on November 23, 2012 by ARIHARAN
கணணி முடங்கி போகும் நேரங்களில், த‌வறுகள் காட்டப்படும். ஏன்இவ்வாறு வருகின்றது என்று தெரி யாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம்.
கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும் கீழே தரப்பட்டுள் ளன.
.
1. மொனிட்டரின் எல்.இ.டி விளக்கு விட்டு விட்டு எரிகிறது:
.
இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப்போய் இருக்கலா ம். மொனிட்டர் கேபிள், டேட்டா கேபி ள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற் றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத் தையும் சரி பார்க்கவும்.
.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது:
.
ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக் கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட் டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக:
.
இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பி ளே கார்டில் பிரச்னை. இந்த கார் டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர் ந்தால் இதனை மாற்ற வேண்டி யதிருக்கும்.
.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்:
.
பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
.
5. தொடர்ந்த பீப் ஒலி:
.
கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதே னும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே அழுத்தப் பட்ட கீ, தூசி அல்லது வேறு பிர ச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
.
6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி. டிரை வின் எல்.இ.டி விளக்கு தொடர் ந்து எரிகிறது:
.
டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
.
7. மொனிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை:
.
ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறா கப் பொருத்தப்பட்டுள்ளது. சரி யாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப் ளையைப் பார்த்து இருக்க வே ண்டும்.
.
8. பவர் எல்.இ.டி எரியவில்லை:
.
மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க் கவும். எஸ்.எம்.பி.எஸ் சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக் கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
.
9. CMOS Error என்று செய்தி வருகிறது:
.
மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அத ன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங் களே கொண்டு வரவும். இதற்கு கண ணியுடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்க வும்.
.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது:
பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவு
ம். ஒரு முறை எடுத்து, இணை க்கும் இடத்தில் உள்ள தூசியி னை நீக்கிப் பொருத்திப் பார்க்க வும்.
.
ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொரு த்தப்பட்டுள்ளதனை உறுதி செய் திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு மு றை எடுத்து, சுத்தம்செய்து மீண் டும் இணைக்கவும்.
.
சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொ டுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.
.
11. சரியான மின்சாரம் இல் லாமல் மதர் போர்டு திடீ ரென முடங்குகி றது:
.
எஸ்.எம்.பி.எஸ் செக் செய் திடவும். அல்லது ராம் மெம ரி சரியாக வேலை செய்கி றதா என்பதைச் சோதனை செய்திடவும்.
.
உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
.
12. மொனிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:
.
டிஸ்பிளே கார்டு சரியாகப் பொரு த்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலை யைச் செய்திடலாம். அல்லது வீடி யோ மெமரியில் பிரச்சினை இருக் கலாம்.
.
13. திரைக் காட்சி அதிர்கிறது:
.
மொனிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
.
14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக் கிறது:
.
கணணிக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். என வே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
.
15. Non System Disk Error:
.
ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட் டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷ ன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
.
16. Missing Operating System:
.
சிஸ்டம் இயக்குவதற்கான கோப்புகள் இல்லாமல் இருக்கலாம்.
.
17. Missing Command Inter preter:
.
Command.com பைல் கரப் ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம் அல்லது அழிக்கப்பட் டிருக்கலாம்.
.
18. IO Error:
.
சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிரு ப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட இயங்குதளம் சரியானதல்ல.
.
19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்:
.
சில டைரக்டரிகள் அல்லது பைல்க ள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKD SK/F அல்லது SCANDISK பயன்படுத் தி அவற்றைச் சரி செய்தி டவும்.
.
20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ் க்கிலிருந்து சத்தம் வருகிறது:
.
சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப் படவில்லை.
.
ஹார்ட் டிஸ்க்குகளில் கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடு த்து விட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும் அல் லது பெருமளவில் பேட் செ க்டார்கள் ஏற்பட்டிருக்க வே ண்டும்.
.
21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற் கிறது:
.
CHKDSK/F அல்லது SCAN DISK பயன்படுத்தி பேட் செ க்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை போர்மட் செய்தி டவும்.
.
22. Hard Disk Not Detected:
.
பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திட வும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவு ம். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப் பட வில்லை:
.
ஹார்ட் டிஸ்க்கை போர்மட் செய்த இயங்குதளம், தற்போதுள்ள மதர் போர்டுடன் இணைந்து போகவில்லை.
.
24. MMX/DLL FILE MISSING:
.
இந்த கோப்புகள் பவர் திடீரெ ன நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம் அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த கோப்புகளை வேறு ஒரு கணணியிலிருந்து கொப்பிசெய்து இதற்கு மாற்ற வும்.
.
பொதுவாக கணணி இயங்காமல் நின்று போய்விட்டால், உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோ ம்.
.
அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. என வே பிரச்சினையின் தன்மையைப் புரி ந்துகொண்டு, உங்களால் கணணி கேபினைத் திறந்து சரி செய்ய முடிய வில்லை என்றால் அதற்கான டெக்னீ ஷியனை அழைத்து சரி செய்திடவும்.

Wednesday, 4 September 2013

Download Link....

https://sites.google.com/site/prabhakathiravan1/kathir/KMP.rar?attredirects=0&d=1

Upload a file and direct Download from blog

Upload a file and direct Download from blog

  When you need to Upload a small file into Web and share with your followers without leaving them from your blog to another hosting file for Download a file.How can i ?Read the Scenario , A Adobe Photoshop Designer Needs to Share his source file(PSD file format) of his Image to his Followers of his Blog.He don't need to Leave them his Blog into Hosting Site that contains malicious ads.


  • Now Create a page in File Cabinet .
  • After Click on "Add File" and Browse the File and Upload it.
  • After Uploading the Image , Right Click on "Download" and select "Copy the Link Address"
  •  Go Back to Blogger Post and Tyep "Download File "and Make Link into copied Link address.