Monday 30 September 2013

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

Posted on April 23, 2013 by ARIHARAN
கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள் ளேயோ அல்லது மதர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலே யோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.
(Cache எனும் இந்த ஆங்கில வார்த் தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படு கிறது என்பதைக் கவனத்திற் கொள் ளுங்கள்)
ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சி பி யூ இந்த கேஷ் மெமரியைப் பயன்படுத்துகிறது. இதனால் கணினி யின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.
கணினியில் கேஷ் மெமரி பயன்படுத்தப்படுவதன் முக்கிய அனுகூ லம் யாதெனில் டேட்டாவைக் கடத்து வதற்கென அமைக்கப்பட்டி ருக்கும் மதர் போர்டிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதை களை சீபீயூ பயன்படுத்தவேண்டிய தேவை அற்றுப் போகி றது.
சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற் திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ் ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீ.பீ.யூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட் டாவைப் ப்ரோ ஸெஸ் செய்து விடுகிறது.
கேஷ் மெமரியில் இரண்டு வகை களுள்ளன. சிபியுனுள்ளேயே இணைந்து வரும் கேஷ் மெமரி யானது Level 1 (L1) cache எனவும் மதர்பொர்டில் வேறாக பொரு த்தப்பட்டுள்ள கேஷ் மெமரியானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.
சீபியுவினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரியானது மதர் போர்டில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரி சிப்பைவிட வேகமாக செயற்படக் கூடியது. அதாவது ப்ரோஸெஸ்ஸ ரின் வேகத்திலேயே இது இயங்கும்.
தனியாகப் பொருத்தப்படும் கேஷ் மெமரியானது பிரதான நினைவகமா ன ரேம்மைவிட இரண்டு மடங்கு வேகத் தில் இயங்கக் கூடியது. எனவே ப்ரோ ஸெஸ்ஸரிலேயே பொருத்தப்படும் கேஷ் மெமரியே சிறந்தது என லாம்.
அதிக வேகம் கொண்ட சீபியூ வுடன் குறைந்தளவு கேஷ் மெமரி யைப் பயன்படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த சீபியு வேகத்துடன் அதிக கேஷ் மெமரியைக் பயன்படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை அவதானிக்க் முடியும்.
சீபியுவில் பயன் படுத்தப்படும் கேஷ் மெமரி போன்றே ஹாட் டிஸ் கிலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட் பம் பயன்படுத்தப்படுகிறது. அதாவாது ஹாட் டிஸ்கிலிருந்து அடிக்கடி அணுகப்படும் டேட்டாவானது திரும்பத் திரும்ப ஹாட் டிஸ்கிலிருந்தே பெறப்படுவதைத் தவி ர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்க ப்படும்.
இங்கு ஹாட்டிஸ்கை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு ரேமில் தேக்கி வைக்கப் படுகி றது, எனினும் இந்த தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஏனெனில் தற்போது ஹாட் டிஸ்க் ஆனது ப்ளேஷ் மெமரி கேஷ் (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி ரேமை விடவும் வேக மாக செயற்படக் கூடியது.

No comments:

Post a Comment