Saturday 12 October 2013


How to Clean a Touch Screen


Smudges all over your gadget's touchscreen, or has an evident fingerprint trail on the latest must-have game you are addicted to imprinted on the screen? Regularly cleaning your cell phone, tablet, MP3 player's touchscreen or any other touch screen device is essential for its upkeep and longevity.
Learn how to wipe away those smudges with ease and how to avoid doing things your touchscreen would not appreciate.

Edit Steps

  1. 1
    Choose a microfiber cloth. This is ideal for cleaning a touchscreen. Some devices will have such a cloth included or perhaps you can borrow one you use on your sunglasses.
    • The cost of such cloth varies. For cloth recommended by companies for their products, the price can be considerably higher simply because of the recommendation. Look around for a good deal on such cloth or substitute with a cheaper but still effective microfiber cloth.
  2. 2
    Turn off the device before commencing to clean it. It is usually much easier to see where to clean when the device is switched off.
  3. 3
    Give the screen a once over by brushing it with the microfiber in small circles. This will remove the majority of simple imperfections.
  4. 4
    Only if truly needed, moisten a cotton cloth, even the corner of your cotton shirt, and repeat the small circular motions. It may actually be enough to just breathe over the screen and use that moisture to clean with.
    • Read the instructions accompanying the cloth you're using. Some of them need to be made slightly damp before use. If this is the case, skip this step and follow the cloth's instructions instead.
    • If dampening a cloth, it is best to use distilled water.
  5. 5
    Brush again with the microfiber cloth to finish off. Don't over-rub though and if there is any dampness left, just leave it to air dry.
    • Do not put too much pressure on the screen when cleaning it.

Monday 30 September 2013

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம்

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம்

ஆங்கில சொற்களை, சரியான முறையில் உச்சரிக்க நமக்கு கற்றுத் தரும் தளம் www.howjsay.com ஆம் இணைய அகராதிகளில் அப்படி வார்த்தைகளை கொடு த்து அதற்கான அர்த்தத்தை பெருகிறோமோ அதே போல இதிலும் எந்த வார்த் தைக்கு நாம் உச்சரிப்பு தேவைப்படுகி றதோ அந்த சொல்லை கொடுத்து அந்த ஆங்கில வார்த்தையின் உச்சரிப்பை கேட்டு பயன் பெறலாம்.
நீங்கள் கற்கும் ஆர்வத்தை அதிகப்ப டுத்தும் நோக்கில் நீங்கள் கொடுக்கும் ஆங்கில‌ வார்த்தை, ரோஜா வண்ணத் தில் தோன்றும். அதன் பிறகு அந்த வார்த்தையி ன்மீது மவுசை நகர்த்தி உச்சரிப் பைக்கேட்டு அறியலாம். ஒரு சொ ல் உச்சரிக்கப்படும் விதத்தை அறிந்திருப் பது பேசும்போதும் பேரூத வியாக இருக்கும் தானே.

HARD DISK ஐ பாதுகாப்பது எப்படி?

HARD DISK ஐ பாதுகாப்பது எப்படி?

Posted on February 2, 2013 by ARIHARAN
கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைக ளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி,அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இதுபோன்ற பல கார ணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdisk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்ட றிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக்கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்க ளால் எதுவும் செய்ய இயலாது என்ப தை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இரு க்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம் ப்யூட்டர் என்றா ல் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
Check Disk செய்யும் முறை:
1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2. அடுத்து வரும் குட்டி விண்டோவி ல் Tools என்ற Tab-ஐ தெரிவு செய் யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரு ம்.
3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண் டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டா வது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Driveதான் உங்கள் கம்ப்யூட் டரை இயக்கிக்கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட் டர் Start ஆகும் போது செய்ய வா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ள தை கொடுத்து விடவும். இப்போது உங் கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம் பிக்கும்.
5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. என வே சரியான நேரத்தில் இதை செய்யுங் கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள் ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல் லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப் பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும்.
6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள்.

நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

Posted on May 7, 2013 by ARIHARAN
இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் கணினியை ப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற் படும் சிரமமே ‘Computer Vision Syndrome’ என்றழைக்கப்படுகி றது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொ டர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவி கிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
உடலில் சோர்வு, பின்கழுத்து, முதுகு மற்றும் தலைவலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்ப தாலும், கண் இமைகள் சிமிட்டல் குறைவதாலும் கண் கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.
இந்த சிரமங்களுக்கான காரணங்கள்:
1. உட்காரும் ஆசனத்தின் அமைப்பு, உயரம் மற்றும் நாம் உட்கா ரும் நிலை.
2 கணினி விசைப் பலகைக்கும், கணினித் திரைக்கும் போதுமான வெளிச்சமின்மை.
3. கணினித் திரையில், கணினி பயன் படுத்துபவர்களுக்குப் பின் புறமுள்ள சன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து கண் கூசும் ஒளி வீச்சு.
4. கண்களுக்கும் திரைக்குமுள்ள இடைவெளி.
5. கணினி பயன்படுத்தும் தனி ஒருவரின் வயதுக்கேற்றபடி, கண் களின் சரி செய்யப்படாத தூரப் பார்வை (Myopia), கிட்டப் பார்வை (Hypermetropia), சிதறல் பார்வை (Astigmatism) மற்றும் வெள்ளெழு த்து (Presbyopia) பார்வை குறை பாடு.
6. கண்களின் தசை அழற்சியால், கண்கள் ஒருங்கிசைவு சரியில்லாதி ருத்தல் (Ocular Muscle Imbalance)
எனவே, உடலிலும், கண்களிலும் ஏற்ப டும் சிரமங்களைத் தவிர்த்து, சரி செய்வ து எப்படி?
உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங் களெல்லாம் சாதாரணமாக தற்காலிக மானதே. கணினியில் வேலை செய்வ தை நிறுத்தி எழுந்த சில நிமிடங்களில் அதிக தொல்லைகள் இராது.
கணினியில் வேலை செய்யும் போது, குறிப்புகளை விசைப் பல கைக்கு மேலும், கணினித் திரைக்கு அருகிலும் வைத்துக் கொண் டால் நல்லது. ஒரு மணிக்கொரு முறை ஆசனத்தை விட்டு எழுந்து, அலுவலகத் திற்கு உள்ளேயே சிறிது நடக்கலாம். கை கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்ய லாம். கழுத்து, தோள் இரண்டுக்கும் தக்க பயிற்சி செய்யலாம்.
1. உட்காரும் நாற்காலி உயரத்தை வேண்டுமளவு ஏற்றவும், இறக்கவும் தகுந்ததாக இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்காரும் பொழுது முதுகுக்குப் பொருத்தமாகவும், உட்காரவும், சாய்மானத் திலும் Foam வைத்தும் இருக்க வேண்டும். கைகளை சம நிலை யில் வைக்க நாற்காலியில் கைத்தாங்கி வைத்தும் இருக்க வேண் டும்.
2. கணினி விசைப் பலகையிலும், திரையி லும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி விளக்கு கள் அமைக்கப்பட வேண்டும்.
3. கண்கள் கூசும் ஒளி வீச்சு இருந்தால், கணினியின் இருப்பிட த்தை மாற்றியமைக்க வேண்டும்.
4. கணினியின் திரைக்கு வெகு அருகில் செல்லாமல் சற்று தூரத்திலிருந்தபடி (சுமார் 33 செ.மீ) பார்த்து வேலை செய்ய வேண்டும்.
5. கண் மருத்துவரிடம் கண்க ளை வருடம் ஒரு முறை, முறை யாகப் பரிசோதித்து தேவைக்கே ற்றபடி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். 40 வயதிற் கு மேல் கண்கள் பரிசோதனை யின் போது, Glaucoma பாதிப்பில்லையென்றறிய, கண்களின் நீர் அழுத்தத்தையும் (Intramuscular Pressure) பரிசோதிக்க வேண்டும். வெள்ளெழுத்துக் கண்ணாடிகளை இரண்டு வருடத்துக்கு ஒரு முறை 40 வயதிலி ருந்து 55 வயது வரை மாற்ற வேண்டியிரு க்கலாம்.
6. தேவையானால், கண் தசைகளின் ஒருங்கி சைவை (Muscle Balance) அரசு கண் மருத்துவ மனைகளில் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவை யானால் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம்.
கணினியில் வேலை செய்யும்பொழுது, அவவப்பொழுது கண்க ளுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். தொடர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிராமல், இடையிடையில் சன்னல் வழியாக தூரத்தில் உள்ள பொருளையோ, வானத்தையோ வேடிக்கை பார் க்கலாம்.
அடிக்கடி கண் இமைகளை மூடி மூடித் திறப்பதால், கண்ணீரினா ல் கண்கள் ஈரமாகி, கண்கள் உலர்வதையும், கண்களின் உறுத் தலையும் குறைக்கலாம். மருந்துக் கடைகளில் கிடைக்கும் Tears PLus, Moisol போன்ற சொட்டு மருந்துகளையும் உபயோகிக்க லாம்.
கண்களுக்கு மிக அருகிலுள்ள கணினித் திரையையே கண்இமைக்காமல் நீண்ட நேரம் பார்ப் பதை விட, சுலபமாகப் பின் பற்றக் கூடிய ’20 – 20 – 20 சட்டம்’ (20 – 20 – 20 Rule) சொற்றொட ரின்படி, 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி தூரத்திலுள்ள பொருட்களை, 20 நொடிகள் பார்ப்பது கண்களுக்கு ஓய்வைத் தரும் எனப்படுகிறது. அரை மணிக்கொரு முறை 20 நொடிகள் கண்களை மூடியிரு ப்பதும் நல்ல பயன் தரும் எனப்படுகிறது.
எனவே தகுந்த முன்னேற்பாடுகளைக் கடைப்பிடித்து உடல் நலம் பேணுவோம். கண்களைக் காப்போம்.

WiFi என்றால் என்ன?

WiFi என்றால் என்ன?

Posted on July 1, 2013 by ARIHARAN
“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாம ல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட் வொர்க்). இந்த இணைப்பு wired நெட் வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப் யூட்டர்-ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாக வும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது
WiFi Hotspots என்றால் என்ன?
WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக் கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்க ள் கணினியில் செயல்படுத்தி விட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்று ம் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi  ஹாட் ஸ்பாட்டாக(access point) இருக்கு ம்.
வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?
1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு(Operating system)
2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.
3. ஒரு கம்பியில்லா திசைவி (wire less router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட (inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.
5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல் கள் (router setup instructions) ஒரு நகல்.
வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?
1. இணையத்துடன் இணைக்கவும்
2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.
3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.
5. இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

Posted on April 23, 2013 by ARIHARAN
கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள் ளேயோ அல்லது மதர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலே யோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.
(Cache எனும் இந்த ஆங்கில வார்த் தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படு கிறது என்பதைக் கவனத்திற் கொள் ளுங்கள்)
ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சி பி யூ இந்த கேஷ் மெமரியைப் பயன்படுத்துகிறது. இதனால் கணினி யின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.
கணினியில் கேஷ் மெமரி பயன்படுத்தப்படுவதன் முக்கிய அனுகூ லம் யாதெனில் டேட்டாவைக் கடத்து வதற்கென அமைக்கப்பட்டி ருக்கும் மதர் போர்டிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதை களை சீபீயூ பயன்படுத்தவேண்டிய தேவை அற்றுப் போகி றது.
சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற் திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ் ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீ.பீ.யூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட் டாவைப் ப்ரோ ஸெஸ் செய்து விடுகிறது.
கேஷ் மெமரியில் இரண்டு வகை களுள்ளன. சிபியுனுள்ளேயே இணைந்து வரும் கேஷ் மெமரி யானது Level 1 (L1) cache எனவும் மதர்பொர்டில் வேறாக பொரு த்தப்பட்டுள்ள கேஷ் மெமரியானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.
சீபியுவினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரியானது மதர் போர்டில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரி சிப்பைவிட வேகமாக செயற்படக் கூடியது. அதாவது ப்ரோஸெஸ்ஸ ரின் வேகத்திலேயே இது இயங்கும்.
தனியாகப் பொருத்தப்படும் கேஷ் மெமரியானது பிரதான நினைவகமா ன ரேம்மைவிட இரண்டு மடங்கு வேகத் தில் இயங்கக் கூடியது. எனவே ப்ரோ ஸெஸ்ஸரிலேயே பொருத்தப்படும் கேஷ் மெமரியே சிறந்தது என லாம்.
அதிக வேகம் கொண்ட சீபியூ வுடன் குறைந்தளவு கேஷ் மெமரி யைப் பயன்படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த சீபியு வேகத்துடன் அதிக கேஷ் மெமரியைக் பயன்படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை அவதானிக்க் முடியும்.
சீபியுவில் பயன் படுத்தப்படும் கேஷ் மெமரி போன்றே ஹாட் டிஸ் கிலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட் பம் பயன்படுத்தப்படுகிறது. அதாவாது ஹாட் டிஸ்கிலிருந்து அடிக்கடி அணுகப்படும் டேட்டாவானது திரும்பத் திரும்ப ஹாட் டிஸ்கிலிருந்தே பெறப்படுவதைத் தவி ர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்க ப்படும்.
இங்கு ஹாட்டிஸ்கை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு ரேமில் தேக்கி வைக்கப் படுகி றது, எனினும் இந்த தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஏனெனில் தற்போது ஹாட் டிஸ்க் ஆனது ப்ளேஷ் மெமரி கேஷ் (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி ரேமை விடவும் வேக மாக செயற்படக் கூடியது.