Monday 30 September 2013

நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

Posted on May 7, 2013 by ARIHARAN
இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் கணினியை ப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற் படும் சிரமமே ‘Computer Vision Syndrome’ என்றழைக்கப்படுகி றது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொ டர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவி கிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
உடலில் சோர்வு, பின்கழுத்து, முதுகு மற்றும் தலைவலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்ப தாலும், கண் இமைகள் சிமிட்டல் குறைவதாலும் கண் கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.
இந்த சிரமங்களுக்கான காரணங்கள்:
1. உட்காரும் ஆசனத்தின் அமைப்பு, உயரம் மற்றும் நாம் உட்கா ரும் நிலை.
2 கணினி விசைப் பலகைக்கும், கணினித் திரைக்கும் போதுமான வெளிச்சமின்மை.
3. கணினித் திரையில், கணினி பயன் படுத்துபவர்களுக்குப் பின் புறமுள்ள சன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து கண் கூசும் ஒளி வீச்சு.
4. கண்களுக்கும் திரைக்குமுள்ள இடைவெளி.
5. கணினி பயன்படுத்தும் தனி ஒருவரின் வயதுக்கேற்றபடி, கண் களின் சரி செய்யப்படாத தூரப் பார்வை (Myopia), கிட்டப் பார்வை (Hypermetropia), சிதறல் பார்வை (Astigmatism) மற்றும் வெள்ளெழு த்து (Presbyopia) பார்வை குறை பாடு.
6. கண்களின் தசை அழற்சியால், கண்கள் ஒருங்கிசைவு சரியில்லாதி ருத்தல் (Ocular Muscle Imbalance)
எனவே, உடலிலும், கண்களிலும் ஏற்ப டும் சிரமங்களைத் தவிர்த்து, சரி செய்வ து எப்படி?
உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமங் களெல்லாம் சாதாரணமாக தற்காலிக மானதே. கணினியில் வேலை செய்வ தை நிறுத்தி எழுந்த சில நிமிடங்களில் அதிக தொல்லைகள் இராது.
கணினியில் வேலை செய்யும் போது, குறிப்புகளை விசைப் பல கைக்கு மேலும், கணினித் திரைக்கு அருகிலும் வைத்துக் கொண் டால் நல்லது. ஒரு மணிக்கொரு முறை ஆசனத்தை விட்டு எழுந்து, அலுவலகத் திற்கு உள்ளேயே சிறிது நடக்கலாம். கை கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்ய லாம். கழுத்து, தோள் இரண்டுக்கும் தக்க பயிற்சி செய்யலாம்.
1. உட்காரும் நாற்காலி உயரத்தை வேண்டுமளவு ஏற்றவும், இறக்கவும் தகுந்ததாக இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்காரும் பொழுது முதுகுக்குப் பொருத்தமாகவும், உட்காரவும், சாய்மானத் திலும் Foam வைத்தும் இருக்க வேண்டும். கைகளை சம நிலை யில் வைக்க நாற்காலியில் கைத்தாங்கி வைத்தும் இருக்க வேண் டும்.
2. கணினி விசைப் பலகையிலும், திரையி லும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி விளக்கு கள் அமைக்கப்பட வேண்டும்.
3. கண்கள் கூசும் ஒளி வீச்சு இருந்தால், கணினியின் இருப்பிட த்தை மாற்றியமைக்க வேண்டும்.
4. கணினியின் திரைக்கு வெகு அருகில் செல்லாமல் சற்று தூரத்திலிருந்தபடி (சுமார் 33 செ.மீ) பார்த்து வேலை செய்ய வேண்டும்.
5. கண் மருத்துவரிடம் கண்க ளை வருடம் ஒரு முறை, முறை யாகப் பரிசோதித்து தேவைக்கே ற்றபடி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். 40 வயதிற் கு மேல் கண்கள் பரிசோதனை யின் போது, Glaucoma பாதிப்பில்லையென்றறிய, கண்களின் நீர் அழுத்தத்தையும் (Intramuscular Pressure) பரிசோதிக்க வேண்டும். வெள்ளெழுத்துக் கண்ணாடிகளை இரண்டு வருடத்துக்கு ஒரு முறை 40 வயதிலி ருந்து 55 வயது வரை மாற்ற வேண்டியிரு க்கலாம்.
6. தேவையானால், கண் தசைகளின் ஒருங்கி சைவை (Muscle Balance) அரசு கண் மருத்துவ மனைகளில் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவை யானால் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம்.
கணினியில் வேலை செய்யும்பொழுது, அவவப்பொழுது கண்க ளுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். தொடர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிராமல், இடையிடையில் சன்னல் வழியாக தூரத்தில் உள்ள பொருளையோ, வானத்தையோ வேடிக்கை பார் க்கலாம்.
அடிக்கடி கண் இமைகளை மூடி மூடித் திறப்பதால், கண்ணீரினா ல் கண்கள் ஈரமாகி, கண்கள் உலர்வதையும், கண்களின் உறுத் தலையும் குறைக்கலாம். மருந்துக் கடைகளில் கிடைக்கும் Tears PLus, Moisol போன்ற சொட்டு மருந்துகளையும் உபயோகிக்க லாம்.
கண்களுக்கு மிக அருகிலுள்ள கணினித் திரையையே கண்இமைக்காமல் நீண்ட நேரம் பார்ப் பதை விட, சுலபமாகப் பின் பற்றக் கூடிய ’20 – 20 – 20 சட்டம்’ (20 – 20 – 20 Rule) சொற்றொட ரின்படி, 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி தூரத்திலுள்ள பொருட்களை, 20 நொடிகள் பார்ப்பது கண்களுக்கு ஓய்வைத் தரும் எனப்படுகிறது. அரை மணிக்கொரு முறை 20 நொடிகள் கண்களை மூடியிரு ப்பதும் நல்ல பயன் தரும் எனப்படுகிறது.
எனவே தகுந்த முன்னேற்பாடுகளைக் கடைப்பிடித்து உடல் நலம் பேணுவோம். கண்களைக் காப்போம்.

No comments:

Post a Comment